Thursday 26 January 2012

என்றும் மறையாது தமிழிசை

கம்ப்யூட்டரையே நம்பி, நான்கைந்து ராகங்களையே தெரிந்துகொண்டு வருடத்திற்கு ஒரு படம் இசைஅமைத்து வானலாவிய புகழை அடைந்த‌ இசையமைப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஏனோ இவர்களது பாடல்களை மீண்டும் ஒரு முறை கேட்க தோன்றுவதே இல்லை வார்த்தைகளும் புரிவதே இல்லை. 

தமிழ்...... கொலைவெறி என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது திரு. இளையராஜாவின் இசையில் ஒரு வருடத்திற்குள் ஐந்து படங்க‌ள் வரை வெளிவந்து இருகின்றன. அனைத்து படங்களின் பாடல்களும் ஒன்றையொன்று தழுவாமலும் தமிழ் வார்தைகள் புரியும்படியும் மனித வாத்திய கருவிகளுடன் உரிய ஆண்குரல் பெண்குரலில் இணைந்து பல இசை நுணுக்கங்களை கொண்டு இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இசையால் தமிழை திக்கெட்டும் பரவச்செய்த இவர் இசைராஜா மட்டுமல்லாது தமிழ்ராஜாவும் அவரே தான். 

மயில்வாகனா

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் கண் கோளாறு

இந்திய கிரிக்கெட் அணியின் படு தோல்வி என்பது மனதை வருத்தப்படுத்துகின்ற செய்தி,
இதை யாரும் மறுக்கமுடியாது, காரணம் அணியின் தலைவர் முதல் பத்திரிக்கை வரை அலசிக்கொண்டுதான் இருக்கின்றன.

2 சதம் அடிக்கும் வீரர்களும் எதிரணியில் நம் எதிரணியில் இருக்கத்தான் செய்கிறார்கள்

என்னைப் பொறுத்தவரை நம் அணியின் வீரர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை சரிவர செய்யப்படவில்லை என்பது தான்.

அணியின் மருத்துவ குழுவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

மயில்வாகனா

Sunday 22 January 2012

காலம்





"காலம் கடந்து விட்டது  என்று சொல்லாதே
காலன் உன்னை கடக்கும் வரை
காலம் உனக்கு சொந்தம்

உழைப்பவனுக்கும் தூங்குபவனுக்கும்
24 மணிநேரமும் சொந்தம்

எல்லாமே இருக்கும் உலகில்
இல்லாததை தேடுபவன் முட்டாள்

பக்கம் வந்து கையசைக்க
காலம் ஒன்றும் கன்னியல்ல
காட்டாற்று வெள்ளம் அது
கடந்து விட்டால் பயனுமில்ல"

மயில்வாகனா

மயில்வாகனனாகிய நான்

ராஜராஜேஸ்வரம் என்ற தற்போதைய தஞ்சையில் பிறந்து 48 அகவையை கடந்து வணிகவியலில் இளங்கலை பயின்று தமிழ்சார்புடைய நண்பர்களை நாடி இந்த இணைய தளத்தில் இணைவதில் அகமகிழ்கிறேன்.

வாழ்க தமிழ்.

மயில்வாகனா